Friday, 20 December 2024

தேர்ந்தெடுக்க ஒரு சொர்க்கம் அல்லது நரகம். பெரு.முருகன்

தேர்ந்தெடுக்க ஒரு சொர்க்கம் அல்லது நரகம்.
பெரு.முருகன்.


[இது ஒரு நீண்ட கட்டுரை. நகைச்சுவை கலந்து எழுதப்பட்ட இக்கட்டுரை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல. மாறாக முக்கியமான மதங்களின் சொர்க்கம் நரகம் சம்பந்தப்பட்ட விவரங்களை என்பாணியில் எழுதியிருக்கிறேன்]


மனிதனாவன் இறந்து போய்விட்ட பிறகு தான் அல்லது தன் ஆத்மா என்ன நிலையில் இருக்கும் என்பதை நினைந்து கவலைப்பட்டு படைத்ததே சொர்க்கம், நரகம். தனக்கு வேண்டப்பட்டவர்கள் அல்லது தான் விரும்பிய எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் இறந்த பின் சொர்க்கம் செல்வர், மற்றும் எதிரணியில் இருப்பவர்கள் நரகம் செல்வாரென எழுதி வைத்து இருக்கின்றனர். எழுதி வைத்தவர்கள் எல்லாம் சமுதாயத்தில் வல்லவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்பது அவரவர் அவர்களைப் புரிந்துகொள்ளும் போக்கு.

ஆக மனிதர்கள் பயத்திலேயே வாழ்கின்றனர். பயம்கூட வாழ்வின் முக்கியப்பகுதி. ஆம் அப்படித்தான் சமுதாயம் மனிதர்களைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றது. ஆனால் பலர் பயமே வாழ்க்கையாக வாழ்ந்தும் கழித்து விடுகின்றனர். எப்படியோ போகட்டும்!!! நாம் வந்த வேலையைப் பார்க்கலாம்!! முதலில் இந்நாட்டின் பெரும்பான்மை மதமாக இருப்பதினாலும், சொர்க்கம் நரகம் பற்றி ஏராளமான விவரணைகள் இருப்பதினாலும் ஆரியமதம் என்று சொல்லப்படுகின்ற இந்துமதத்தை பற்றி முதலாவது விவரணை.


சொர்க்கலோகம்/தேவலோகம்.

சொர்க்கலோகம் அல்லது தேவலோகம் வானத்தில் அல்லது ஆகாயத்தில் நிலவுக்குக் கீழே எங்கோயோ ஓரிடத்தில் இருக்கின்றது.அதாவது நிலவுக்குக் கீழாகத் தொண்ணூறு இலட்சம் யோசனை தூரமாம். தேவலோக அதிபதி இந்திரன் தான் இதற்குத் தலைவர், இவர் ஒருவரே அல்லர், இடம், பொருள், காலம், இடப்படும் சாபம் முதலியவற்றுக்கு ஏற்றாற்போல் அவர் மாறிக்கொண்டே இருப்பார், ஆனால் இந்திராணி என்பவர் ஒருவரேதான்! என்ன இந்திராணி ஒருவர்தானா, ஆனால் இந்திரர்கள் பலபேரா எனச் சந்தேகம் இயல்பாக எழுகிறது அன்றோ? ஆமாம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, சொர்க்க நரகங்களைப் பற்றி விவரிக்கும் கருடபுராணத்தில் இவ்வாறுதான் எழுதப்பட்டுள்ளது. 

இதற்கொரு உதாரணம் வேண்டுமானால், கேரளாவில் சில குறிப்பிட்ட ஜாதிகளிலே தாய்வழி சமூகம் நிலவி வந்தது. அதைச்சார்ந்த பெண்களுக்கு ஏராளமான கணவர்கள் இருந்தனர். சில பெண்களுக்கு அதீதமான அழகும் ஆண்களைத் தாங்கிக்கொள்ளும் திறனும் இருந்தால் அவளுக்கு அதிகமான கணவர்கள் வாய்க்கும். ம்ஹூம் ஒரு பெண்ணுக்கு அதிகப்பட்சமாகப் பதினைந்து கணவர்கள் இருந்தனராம்.

அவர்கள் கொடுத்து வைத்தவர்கள், சண்டைப்பிடிக்க ஒரு கணவன் மட்டும் போதாது, ஒன்பது கணவர்கள் வேண்டும் என்பவர்களுக்கு இந்த ஏற்பாடு ஒரு வரப்பிரசாதம்! போகட்டும். நாம் வந்த வேலையைப் பார்க்கலாம்.


எண்ணூறு கோடி மக்கள்த்தொகை இருக்கும் இவ்வுலகில் வாழும் அனைவருமே புண்ணியமும் தர்மகாரியமும் செய்து சொர்க்கத்திற்கு செல்கிறார் எனக்கொள்வோம், அப்போது அத்துணை மனிதருக்கும் அங்கே இடம் இருக்குமா என்று கேட்டால், இடமிருக்கும் என்றுத்தான் தோன்றுகிறது. சரி அங்கே போகும்போது பார்த்துக்கொள்ளலாம்!

இப்போது அதாவது சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்துமதம் என்று பெயரிடப்பட்டிருக்கும் சைவ வைணவ உள்ளடக்கிய வேதம் முதல் சாதாரண உள்ளூர் தெய்வங்கள்வரை கொண்டிருக்கும் இந்துமதம், ஜைனமதம், பெளத்தமதம், கிறிஸ்துவ இஸ்லாமிய மற்றும் யூத மதங்கள் எனப் பல மதங்கள் இன்றைய தினத்தில் உலகில் இருந்தாலும், இந்துமதத்தில் சொல்லப்பட்டுள்ள சொர்க்க நரக கதைகளுக்கு இணையாக வேறெந்த மதத்திலும் இல்லை, எனவே இதில் இந்து மதத்திற்கே முதலிடம்! 











   








Saturday, 9 November 2024

இந்துமத சர்ச்சைகள் விவாதங்கள்: பட்டையும் நாமமும்.

 

இந்துமத சர்ச்சைகள் விவாதங்கள்.

நெற்றியில் அணியும் சைவப்பட்டை மற்றும் வைணவ நாமம் ஆகியவற்றின் உண்மைப்பொருளைப் பற்றியக் கட்டுரை





 இலிங்கம், இது சைவர்களின் புனிதக்குறியீடாகும், மற்றும் ஏறத்தாழ அனைத்து இந்துமக்களின், சிவனைக்குறிக்கிற சின்னமாகும். சிவன் கோயில்கள் அனைத்திலும் சிவன் உருவத்திற்குப்பதிலாக இந்தச்சின்னத்தையேப் போற்றி வணங்குகின்றனர்.

 

இலிங்கம் என்பது ஆவுடையார் என்ற கீழ்ப்பாகம் மற்றும் மேல்பாகத்தில் நீளமான உருளை வடிவத்தில் இலிங்கமும்  இருக்கும் வடிவமாகும். இவையிரண்டும் முறையே கீழ்பாகமான ஆவுடையார் என்பது பெண்ணின் மறைவுறுப்பான யோனியையும் மேல்பாகம் ஆணின் மறைவுறுப்பான இலிங்கத்தையும் குறிக்கிறது என்பது அதைப்பார்த்தாலே விளங்கும்.

 

சிவபுராணத்தில் இதற்கும் ஒரு அசிங்கமான கதை சொல்லப்படுகிறது. தாருகாவனம் என்ற காட்டுக்குள்ளே முனிவர்கள் பலர் தம் மனைவியரோடு குமரிகளோடு வாழ்ந்து வந்தனராம், அப்போது முனிவர்களின் தவவலிமையை, சோதிக்க நினைத்த  சிவபெருமான ஆண்டிக்கோலத்தில் நிர்வாணமாக அவ்விடத்திற்குச் சென்றாராம். அவருடைய நிர்வாண சொரூபத்தையும் அழகையும் கண்ட முனிவர்களின் மனைவியரும் குமரிகளும் சொக்கிப்போய் நின்றனராம். இதனால் வெகுண்டுப்போய், வந்திருப்பவர் யார் என்று அறியாத முனிவர்கள், அவருடைய ஆண்குறி அறுந்து போகச் சாபம்  கொடுத்தனராம்.

 

இதனால் அவருடைய ஆண்குறி அறுந்துபோய் பூமியில் விழப்பார்த்ததாம். அப்படி விழுந்தால், பூமியே பிளவுப்பட்டு போய்விடும் என்றஞ்சிய பார்வதி தேவி, அதைத் தன்னுறுப்பான யோனியினால் தாங்கிப்பிடித்துக் கொண்டாராம். அதுவே நாம் வணங்குகிற இலிங்கம் என இந்தப்புராணத்திலே கூறப்பட்டிருக்கிறது.

 

சிவபெருமான் மனிதனாகப் பிறந்து தெய்வீக நிலையை அடைந்தவரோ அல்லது உண்மையிலே தெய்வீகமானவரோ நமக்குத் தெரியாது. ஆனால் இலிங்கச்சின்னம் என்ன சொல்கிறது என்று ஒருவாறு யூகிக்கலாம்.  தொடக்கத்தில் குரங்கிலிருந்து உருமாறிக்கொண்டு மெல்லமெல்ல மனிதராக உருவெடுத்தவர்கள், தாம் உருவாகக் காரணமாக மூலக்காரணமாக இருப்பது ஆண் மற்றும் பெண் உறுப்புகளே என்று விளங்கிக்கொண்டதனால், அவற்றைப் போற்றி வணங்கத் தலைப்பட்டு, ஒரு சின்னமாகச் சமைத்தார்கள். அதுவே இன்று நாம் காணுகின்ற இலிங்கச்சின்னமாகும். இந்த ச்சின்னம் உலகெங்கும் குறிப்பாக ஆசிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 

 

சிவனின் கையிலிருக்கும் சூலம் நினைவுப்படுத்துவது என்ன? நடுப்பக்கம் கூர்மையாக நீட்டிக்கொண்டிருப்பதும், இரண்டுப்பக்கங்களிலும் இருக்கும் இரண்டு முனைகளும் லேசாக வளைந்திருப்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! ஆகச் சண்டையில் போரில் இந்தச்சூலத்தைப் பயன்படுத்தி இருக்கமாட்டார்கள் என்பது வெட்டவெளிச்சம்! ஆக இந்தச்சூலம் சொல்வது என்ன? இரண்டுபக்கங்களிலும் சற்றே வெளிப்பக்கமாக வளைந்திருப்பது பெண்குறி, மற்றும் நடுவில் குத்திட்டு நிற்பது ஆண்குறியாகும். இப்போது அம்மன் கையிலிருக்கும் சூலம் யாவும் இதே கதையைத்தான் கூறுகின்றன.

 

ஆகப் படைப்பின் தத்துவத்தை, அழகாக விவரிக்கும் இலிங்கம் மற்றும் சூலத்தின் அழகியலைப் போற்றுவோம்.

 

வைணவ நாமம்.


வைணவ நாமம், இது தென்கலை மற்றும் வடகலையென இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தாலும், இரண்டு பிரிவுகளுமே விஷ்ணுவைத்தான் வணங்குகின்றன. சரி! விஷயத்திற்கு வருவோம். இரண்டுப் பக்கங்களிலும் இரண்டு வெண்மையான கோடுகள், நடுவே சிவப்பாக ஒரு கோடு, மூன்றையும் இணைத்து மூக்கின் தொடக்கம்வரையில் சற்றே நீட்டியிருப்பார்கள். இது தென்கலை நாமம். வடகலை நாமமானது இரண்டு வெண்மையான கோடுகள், நடுவே சிவப்பான கோடு, இவை மூன்றையும் இணைத்திருப்பார்கள், என்ன மூக்கு வரை நீண்டிருக்காது. இது வடகலை நாமம். இதுத்தவிர பெண்கள் ஒற்றைச்சிவப்பு கோட்டையே நெற்றியில் இட்டிருப்பார்கள். மற்றும் திருமணமான பெண்கள் அதன் நுனியில் வி வடிவத்தில் வரைந்திருப்பார்கள். மற்றும் கன்னடபிராமணர்கள் சிலரும் ஒற்றைக்கோட்டை மஞ்சள் வண்ணத்தில் வரைந்திருப்பார்கள். அவர்கள் பிரம்மசாரிகளாக இருப்பர் எனவும் சொல்கின்றனர்.

 

இவ்விடத்தில் கட்டுரைக்குச் சம்பந்தமான ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சொல்கிறேன். அதாவது சிவனை வணங்கும் சைவ மதம் ஆண்மை சம்பந்தப்பட்டது. அதேசமயம் விஷ்ணுவை கடவுளாக வணங்கும் வைணவ மதம் பெண்மை சம்பந்தப்பட்டது. இதை ஆன்மீகவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர்.


ஆனாலும் வைணவப்பிரிவைச் சார்ந்தவர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். 

 


அதனால் இலிங்கச்சின்னம் என்பது ஆண் பெண் உறுப்புகள் சேர்ந்த வடிவம் என்பது போல, வைணவ நாமம் என்பது ஒன்று ஆண் பெண் உறுப்புகளாக இருக்கக்கூடும், அல்லது பெண் உறுப்பாக மட்டுமே இருக்கக்கூடும். மற்றபடி நாமம் என்பது விஷ்ணுவின் பாதம் என்பதெல்லாம், முழுக்கமுழுக்க சர்க்கரையும் நெய்யும் கலந்த அல்வா! அப்படியானால் தன் பாதத்தையே விஷ்ணு தன்னுடைய நெற்றியிலே வரைந்திருக்கிறாரா? இடதுப் பாதமா? அல்லது வலது பாதமா? என்ற பதில் இல்லா கேள்விகள் இங்கே பிறக்கின்றன.


 


இருப்பினும் மனிதகுல ஆரம்பகாலத்தில் படைப்பு  தத்துவத்தின் சிகரமாக இது விளங்கிவந்தது என்றால் மிகையல்ல. ஆனால் இத்தளவு விஷயமானது தெரியவந்ததால், அதை நெற்றியில் இடுவது யோசனைக்குரியது!