நூல் அறிமுகம்.
ஹோமரின் பள்ளியறை ஒடிஸி. தமிழில் பெரு.முருகன்.
2002-ஆம் ஆண்டில் மேற்கு கேகேநகரில் ஒரு நடைப்பாதை புத்தக்கடையில் BEDSIDE ODESSEY என்ற நூலைக் கண்டெடுத்து அதன் உள்ளடக்கத்தில் நடையில் கவரப்பட்டு உடனடியாக ஸ்நேகா பதிப்பகத்திற்காக மொழிப்பெயர்க்க தொடங்கினேன். ஒரு ஆறுமாத காலத்தில் முடித்தும் விட்டேன். அப்போதெல்லாம் கையால்தான் எழுதுவேன், மீண்டும் அதைத் திருத்திப் உடனடியாகப் படியும் எடுப்பேன். ஆனால் ஸ்நேகா பதிப்பகம் இயங்கவில்லை. பின்பு யார் யாரிடமோ கொடுத்தும் பார்த்தேன். ஆனால் அவர்கள் படித்து முடித்து வெகு அருமையாக வந்திருப்பதாகக் கூறுவார்கள், ஆனால் மறுபடியும் நூலைப் பற்றிப் பேசமாட்டார்கள். இறுதியாக 2012-ல் புலம் லோகநாதன் இதைப் பதிப்பித்தார். ஆனால் மொத்தத்தில் 300 பிரதிகளே போட்டிருந்தார். இப்போதுதான் முதன்முறையாகச் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தார் இந்த நூலை நல்ல முறையில் வெளியிடுகின்றனர்.
ஹோமர் அவர்கள் இலியட் மற்றும் ஒடிஸியஸ் என்ற இரண்டு புராணக்கதைகளை படைத்தாரெனப் பெரும்பாலனோருக்கு தெரிந்திருக்கும். இந்தப் புராணங்கள் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒடிஸியஸ் என்ற கதையில் வரும் கதாநாயகன் ஒடிஸியஸ் ஹெலன்
என்ற அழகியை மீட்க, ட்ராய் நகரின் மீது போர்தொடுத்து செல்கின்றான். போர் பத்து வருடங்களாக நடக்கின்றது. இறுதியில் போரில் வெற்றிப்பெற்ற அவன் படைதோழமைகள் தம் சொந்த ஊர்களுக்குத் திரும்ப, இவன் மட்டும், திரும்புகின்ற வழிகளிலே, பல்வேறு, அழகிகளிடம், அப்சரஸுகளிடம், கன்னியர்களிடம் மாட்டிக் கொள்கிறான். பிற்பாடு அவர்களிடம் பல்வித சுகங்களை பெற்றப்பின்னால், தன் மனைவி பெனிலோப்பிடம் வந்து சேர்கின்றான். இதுவே இந்தக் கதையின் உள்ளடக்கம்!!!
என்ற அழகியை மீட்க, ட்ராய் நகரின் மீது போர்தொடுத்து செல்கின்றான். போர் பத்து வருடங்களாக நடக்கின்றது. இறுதியில் போரில் வெற்றிப்பெற்ற அவன் படைதோழமைகள் தம் சொந்த ஊர்களுக்குத் திரும்ப, இவன் மட்டும், திரும்புகின்ற வழிகளிலே, பல்வேறு, அழகிகளிடம், அப்சரஸுகளிடம், கன்னியர்களிடம் மாட்டிக் கொள்கிறான். பிற்பாடு அவர்களிடம் பல்வித சுகங்களை பெற்றப்பின்னால், தன் மனைவி பெனிலோப்பிடம் வந்து சேர்கின்றான். இதுவே இந்தக் கதையின் உள்ளடக்கம்!!!
ஹோமர் இலியட்டையும், ஓடிஸியஸ்ஸையும் இயற்றினார். அவை பல்வித மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்படியெனில் இந்த நூலில் அப்படியென்ன புதுமை? என்று கேட்டால்......... நூலின் முன்னுரையை படித்தாலே இதன் புதுமை புலப்படும். அதாவது ஹோமர் அவர்கள், சாதாரண மக்களுக்காகப் புனைந்த ஓடிஸியஸ் வேறு, மற்றும் அரசவையில் அங்கம் வகிப்பவருக்காக எழுதிய மற்றொரு ஓடிஸியஸ் வேறு என்பது புலப்படும். இரண்டாவதாக எழுதிய இந்த நூலின் பிரதான அம்சம் காதலும் காமமும் அவை இரண்டினில் கலந்திருக்கும் மெலிதான நகைச்சுவை அம்சமுமே.
இந்த நூலை மொழிப்பெயர்த்து பத்து வருடங்களாகிவிட்ட நிலையில் புலம் பதிப்பகம் இதை வெளியிட்டது. மீண்டும் ஒரு ஏழு வருடம் ஆகிவிட்ட நிலையில் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட முன்வந்தது. அப்போது மூலநூல் என் கையில் இல்லை. ஆனால் பதிப்பக உரிமையாளர் இ-புத்தக வடிவில் அதை என்னிடம் காட்டினார். நான் எழுதிய மொழிப்பெயர்ப்புக்கும் அவர் காட்டிய மூலநூலுக்கும் இடையே இரண்டு பக்கங்கள் விடுபட்டிருந்தது தெரியவந்தது. எனினும் என்னுடைய பழைய நூலில் முடிவையும் சரியாகவே மொழிபெயர்த்திருந்தேன்.
சற்றே யோசித்து விடுபட்ட அந்த இரண்டு பக்கங்களையும் மொழிபெயர்த்து, இணைப்பாக என்னுடைய சொந்த வார்த்தைகளில் ஒரு பத்து வார்த்தைகளை எழுதி நூலில் சேர்த்து விட்டேன். ஹோமரின் எழுத்துக்களூடே என்னுடைய வார்த்தைகளும்!!!
வாசக அன்பர்கள் இந்த நூலைப் படிக்குமாறு வேண்டுகிறேன்!!!
பெரு.முருகன்.
வாசக அன்பர்கள் இந்த நூலைப் படிக்குமாறு வேண்டுகிறேன்!!!
பெரு.முருகன்.
No comments:
Post a Comment